அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியரின் ஆஸ்திரேலிய பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
9ம் தேதி முதல் 11ம் தேதி வரை மெல்போர்ன்-சிட்னி மற்றும் பிரிஸ்பேன் ஆகிய இடங்களில் பல பொதுக்கூட்டங்களை நடத்த தயாராகி வந்தார்.
எனினும், விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால், இந்த விஜயத்தை ஒத்திவைக்க டொனால்ட் டிரம்ப் ஜூனியர் முடிவு செய்துள்ளார்.
புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
03 மாநிலங்களிலும் கூட்டங்களுக்கு ஏறக்குறைய 8,000 பேர் டிக்கெட் வாங்கியதாக கூறப்படுகிறது.
ஒரு விஐபி டிக்கெட் $2,500க்கு விற்கப்பட்டது.
இனவாதக் கருத்துக்கள் அங்கு பிரசாரம் செய்யப்படுமோ என்ற சந்தேகம் காரணமாக இந்த சந்திப்புத் தொடர் தொடர்பில் சர்ச்சைக்குரிய சூழல் உருவாகியிருந்தது.