நிலவில் தாவரங்களை வளர்க்கும் திட்டத்திற்காக ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளுக்கு மத்திய அரசு கூடுதலாக 3 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது.
இது குயின்ஸ்லாந்து தொழில்நுட்ப பல்கலைக்கழகம் – RMIT பல்கலைக்கழகம் – ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் மற்றும் இஸ்ரேலில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கூட்டு திட்டமாக செயல்படுத்தப்படுகிறது.
04 வருடங்களில் நிலவின் மேற்பரப்பில் தாவரங்களை வளர்ப்பதே இதன் இலக்காகும்.
அது வெற்றி பெற்றால், நிலவின் மேற்பரப்பில் உணவு மற்றும் மருந்தை உற்பத்தி செய்வதுதான் அவர்களின் அடுத்த திட்டம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, சீனாவும் இதுபோன்ற ஒரு பரிசோதனையை நடத்தியது, ஆனால் அது வெற்றிபெறவில்லை.