தெற்கு ஆஸ்திரேலிய மாநில அரசு சாலை மற்றும் போக்குவரத்து சட்டங்களை திருத்த முடிவு செய்துள்ளது.
அதன்படி, அதிக சக்தி கொண்ட வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு புதிய ஓட்டுனர் உரிமம் வகை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதுபோன்ற வாகனங்களை ஓட்டுபவர்களால் கார் விபத்தில் பலத்த காயம் அல்லது மரணம் ஏற்பட்டால் வழங்கப்படும் தண்டனைகள் அதிகமாக இருக்கும் வகையில் புதிய சட்டங்கள் தயாரிக்கப்பட உள்ளன.
அதிவேகமாக வந்த கார் மோதி 15 வயது சிறுமி உயிரிழந்ததை அடிப்படையாக கொண்டு இந்த புதிய சட்டம் அமுல்படுத்தப்படுவதாக தெற்கு ஆஸ்திரேலிய மாநில அரசு தெரிவித்துள்ளது.
தெற்கு அவுஸ்திரேலியாவில் கவனக்குறைவாக வாகனம் செலுத்தி மரணத்தை ஏற்படுத்தியமைக்கான அதிகபட்ச சிறைத்தண்டனை தற்போது 12 மாதங்கள் ஆகும், ஆனால் புதிய சட்ட திருத்தத்தின் கீழ் அது 07 வருடங்களாக அதிகரிக்கப்படும்.