Sportsசெல்லப்பிராணிகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய மகேந்திர சிங் டோனி

செல்லப்பிராணிகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய மகேந்திர சிங் டோனி

-

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மகேந்திர சிங் டோனிக்கு நேற்று முன்தினம் 42-வது பிறந்த நாளாகும். எனவே அவருக்கு கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், இரசிகர்கள் என உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துகள் குவிந்தன.

இந்நிலையில் டோனி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளார்.

தனது பிறந்தநாளை முன்னிட்டு வீட்டின் செல்லப் பிராணிகளுடன் கேக் வெட்டி கொண்டாடுகிறார். கேக்கை தானும் உண்டு செல்லப் பிராணிகளுக்கும் பகிரும் வீடியோவின் பின்னணியில் இந்தி பாடல் ஒன்று ஒலிக்கிறது.

வீடியோவின் கீழ், ‘உங்களின் அன்பான பிறந்த நாள் வாழ்த்துகளுக்கு நன்றி. என் பிறந்தநாளில் நான் என்ன செய்தேன் என்பது உங்கள் பார்வைக்காக’ என பதிவிட்டுள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...