ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்யப்பட்ட 13,000க்கும் மேற்பட்ட Hyundai கார்கள் இன்ஜின் கோளாறு காரணமாக திரும்பப் பெறப்பட்டுள்ளன.
இந்த குறைபாட்டால் வாகனம் தீப்பிடித்து எரிய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
2014ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட Hyundai ரக கார்களின் 2 மாடல்களுக்கு சொந்தமான கார்கள் மீள அழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Veloster (FS) and Tucson (TL) (variants: FS 1.6GDI, TL 2.0MI) (2014 – 2017)
பாதிக்கப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தும் எவரும் இலவச நிபந்தனை சோதனைக்கு தங்கள் டீலரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.