ஜூன் மாதத்தின் இறுதி வாரத்தில் 08 நாட்களுக்குள் இலத்திரனியல் சிகரெட் பாவனையினால் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக 06 இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை தொடர்பில் நியூ சவுத்வேல்ஸ் சுகாதார அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அவர்களிடமிருந்து வாந்தி, சுயநினைவு இழப்பு உள்ளிட்ட பல அறிகுறிகள் காணப்படுவதாக சுகாதாரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்த இ-சிகரெட்டுகளில் நிகோடின் கலந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
ஆஸ்திரேலிய சட்டம், பொது சில்லறை விற்பனைக் கடைகளில் விற்கப்படும் இ-சிகரெட்டுகளில் எந்த விதமான நிகோடினும் இருப்பது சட்டவிரோதமானது.
அப்படி வாங்குவதற்கு மருத்துவ அனுமதியும் கட்டாயம்.
மேலும், இந்நாட்டின் சட்டத்தின்படி 18 வயதுக்குட்பட்ட எவருக்கும் இலத்திரனியல் சிகரெட்டுகளை விற்பனை செய்வது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.