ஜப்பானில் கடந்த 2011-ஆம் ஆண்டு விபத்துக்குள்ளான ஃபுகுஷிமா அணு மின் நிலையத்திலிருந்து கதிர்வீச்சு நீரை கடலில் கலக்க அந்த நாட்டு அதிகாரிகள் முடிவு செய்துள்ளதைத் தொடர்ந்து, ஜப்பானிலிருந்து உணவுப் பொருள்களை இறக்குமதி செய்ய சீனா தடை விதித்துள்ளது.
அணு உலையைக் குளிரூட்டுவதற்காக பயன்படுத்தப்பட்டு, பல ஆண்டுகளாக சேகரித்து வைக்கப்பட்டிருந்த அந்த நீர், தற்போது பாதுகாப்பான அளவுக்கு கதிர்வீச்சு நீக்கப்பட்டுள்ளதால் அந்த நீரை கடலில் கலப்பது ஆபத்து இல்லை என்று ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையிலும் சீன அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.
இதற்கிடையே, கடலில் ஃபுகுஷிமா அணு உலை நீரைக் கலக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று தென் கொரியாவில் நூற்றுக்கணக்கானவர்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நன்றி தமிழன்