Newsசூரியனுக்கு மிக அருகில் நெருங்கிய நாசாவின் விண்கலம்

சூரியனுக்கு மிக அருகில் நெருங்கிய நாசாவின் விண்கலம்

-

பூமியில் உள்ள அனைத்து உயிர்களின் ஆற்றலுக்கான ஆதாரமாக விளங்கும் சூரியனை ஆய்வு செய்வதற்கு நீண்ட காலமாகவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, சூரியனை மிக அருகில் சென்று ஆராயும் வகையில் ‘பார்க்கர்’ என்ற விண்கலத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 12 ஆம் திகதி விண்ணில் ஏவியது.

சூரியனில் இருந்து வெளிவரும் வெப்ப புயலுக்கான ஆதாரம், காந்த அலை செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை ஆராய அனுப்பப்பட்ட இந்த விண்கலம் கடந்த ஜூன் 27 ஆம் திகதி 5.3 மில்லியன் மைல் தூரத்தில் சூரியனை நெருங்கிச் சென்றதாக நாசா தெரிவித்துள்ளது.

இதுவரை சூரியனை நெருங்கிச் சென்றதிலேயே மிக நெருக்கமான தூரம் இது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அடுத்த மாதம் 21 ஆம் திகதி வீனஸ் கிரகத்தின் ஈர்ப்பு சக்தியோடு ‘பார்க்கர்’ விண்கலம் 4.5 மில்லியன் மைல் தூரத்தில் சூரியனை நெருங்கிச் செல்லவுள்ளது.

தற்போது சூரியனின் வெப்ப அலை பகுதியை நெருங்கிய போதும் பாதிப்பின்றி செயல்பட்டு வரும் இந்த விண்கலம், அடுத்த மாதம் 4.5 மில்லியன் மைல் அருகில் சென்றும் பிரச்சினை இன்றி செயல்பட்டால், சூரியனின் ஆற்றலுக்கான ஆதாரம் மற்றும் செயல்பாடுகளை அறிய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நன்றி தமிழன்

Latest news

நடந்து வரும் விலைப் போரில் Coles-இற்கு எதிராக Woolworths-இன் புதிய திட்டம்

ஆகஸ்ட் மாதத்தில் கூடுதலாக 100 தயாரிப்புகளுக்கு தள்ளுபடி வழங்கப்போவதாக Woolworths அறிவித்துள்ளது. இது சூப்பர் மார்க்கெட் போட்டியாளரான Coles-இற்கு எதிரான புதிய அடியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Pasta...

ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கியதால் NAB $130 மில்லியன் இழப்பை சந்திக்கும்

NAB நிறுவனத்தின் ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கப்படுவதாக ஒரு உள் மதிப்பாய்வு கண்டறிந்ததை அடுத்து, இந்த ஆண்டு அது $130 மில்லியன் இழப்பை சந்திக்கும். சம்பளப் பிரச்சினைகளை...

நவீன ஆற்றலுக்கு மாற திட்டமிட்டுள்ள விக்டோரியா

விக்டோரியன் அரசாங்கம் நவீன ஆற்றலுக்கு மாறுவதற்கான புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது. Gippsland கடல் மண்டலத்தில் கடல் காற்று விசையாழிகள் திட்டத்திற்கு சுமார் $7.9 பில்லியன் செலவாகும் என்று...

அட்லாண்டிக் வரலாற்றில் மிக வேகமாக தீவிரமடையும் புயல்களில் ஒன்றாக எரின் சூறாவளி

ஞாயிற்றுக்கிழமை காலை எரின் சூறாவளி 3வது வகை சூறாவளியாக தரமிறக்கப்பட்டதாக தேசிய சூறாவளி மையம் காலை 8 மணி புதுப்பிப்பில் (மாலை 6 மணி AEST)...