விக்டோரியா மாநிலத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக, ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒருமுறை கொடுப்பனவு வழங்க வேண்டும் என அம்மாநில ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
தற்போது 1,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், இந்த நிலைமையை விரைவில் தீர்க்காவிட்டால், அடுத்த பாடசாலை தவணை ஆரம்பம் முதலே கடும் நெருக்கடி ஏற்படும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
விக்டோரியா மாநிலத்தில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதால், சுமார் 1/3 பள்ளிகள் ஒரு வகுப்பறையில் இருக்கக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளன.
சுமார் 40 வீதமான பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் உதவி அதிபர்கள் கூட வகுப்பறைகளில் கற்பித்தலில் பங்குபற்றுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் சங்கங்கள் முன்பு சுகாதார ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட $3,000 உதவித்தொகையைப் போலவே ஒரு முறை உதவித்தொகையை முன்மொழிகின்றன.
ஆனால், விக்டோரியா மாநில அரசு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.