கான்பராவில் காணாமல் போன பெண் மற்றும் அவரது இரண்டு மகன்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
49 வயதுடைய பெண் ஒருவரும் 22 மற்றும் 19 வயதுடைய இரு இளைஞர்களும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களிடம் போதிய பணமோ கையடக்கத் தொலைபேசி இணைப்புகளோ இல்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இக்குழுவினர் பயணித்த வாகனம் கணிசமான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்களைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் கான்பரா காவல்துறையைத் தொடர்பு கொள்ளலாம்.