Newsஅரிய வகை நோயால் அவதிப்படும் அவுஸ்திரேலிய சிறுமி

அரிய வகை நோயால் அவதிப்படும் அவுஸ்திரேலிய சிறுமி

-

அவுஸ்திரேலியாவில் பெல்லா மேசி (Bella Macey) எனும் 10 வயது சிறுமிக்கு உலகிலேயே அரிய வகை நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சிறுமியின் வலது காலை தாக்கியுள்ள இந்த நோயால், அவர் நகரும் போதும், அந்த காலை தொடும்போதும் அவரது கால் முழுவதிலும் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது.

அவர் குடும்பம், பிஜி நாட்டிற்கு விடுமுறைக்கு சென்றிருந்த போது அந்த சிறுமியின் வலது காலில் ஒரு கொப்புளம் ஏற்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவருக்கு நரம்பியல் தொடர்பான சிக்கலான பிராந்திய வலி நோய்க்குறி (CRPS) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மருத்துவ உலகில் இது மனிதகுலம் அறிந்த மிகவும் வேதனையான நிலை என்றும் தீவிர வலியை ஏற்படுத்தும் அரிய நோய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெல்லாவின் உடலில் இந்த வலி உணரப்படும் இடங்கள் குறித்து அவர் தெரிவிக்கையில்,

‘கால் பயங்கரமாக எரிகிறது. என்னால் குளிக்க முடியாது. என்னால் காலில் எந்த இடத்தையும் தொடக்கூட முடியாது’ என்கிறார்.

பாடசாலைக்கு செல்வது, விளையாடுவது போன்ற குழந்தைகளுக்கான செயல்கள் மட்டுமின்றி பேண்ட் அணிவது போன்ற அன்றாட நடவடிக்கைகள் கூட அவரால் செய்ய முடியாது.

அவுஸ்திரேலியாவில் உரிய மருத்துவ நிவாரணம் கிடைக்காததால், பெல்லாவும் அவரது தாயும் அரிசோனாவில் உள்ள ஸ்பெரோ கிளினிக்கில் மருத்துவ ஆலோசனை பெற்று, அதன்படி சிகிச்சை பெற தேவையான பணத்திற்காக கோஃபண்ட்மீ வலைத்தளம் மூலம் முயற்சி செய்து வருகின்றனர்.

‘இந்த சிறுமி தனது அன்றாட நடவடிக்கைகளை பாதிக்கும் ஒரு நோயினால், தனது குழந்தை பருவ மகிழ்ச்சியை இழந்து கொடூரமான வலியுடன் போராடி வருகிறார்.

அவரது வலது கால் மற்றும் இடுப்பு பகுதி வரை இயக்கம் நின்று விட்டது. அவள் இப்போது பெரும்பாலும் படுக்கையில்தான் இருக்கிறார்.

வீட்டிற்கு உள்ளே சுற்றி வர வேண்டும் என்றால்கூட சக்கர நாற்காலி தயவில்தான் செய்ய முடிகிறது,’ என GoFundMe சமூக வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Latest news

குழந்தைகளுக்கு இதய நோய் அபாயத்தைக் குறைக்கும் கோவிட்-19 தடுப்பூசி

COVID-19 வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு இதய நோய் வருவதைத் தடுப்பதற்குப் பதிலாக, அவர்களின் இதய நோய் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கின்றன என்று ஒரு புதிய...

McDonald’s ஊழியர்கள் இப்போது கல்லூரி கிரெடிட்களையும் பெறலாம்!

ஆஸ்திரேலியாவில் உள்ள McDonald’s, ஊழியர்கள் தங்கள் வேலைத் திறன்களைப் பயன்படுத்தி பல்கலைக்கழகப் பட்டங்களைப் பெறுவதற்கான ஒரு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இதன் மூலம் 20,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் micro-credentials...

செயலிழப்பிற்குப் பிறகு மீட்டெடுக்கப்பட்ட Optus சேவைகள்

நியூ சவுத் வேல்ஸின் Hunter பகுதியில் ஏற்பட்ட மின் தடைகளுக்குப் பிறகு சேவைகள் மீட்டமைக்கப்பட்டுள்ளதாக Optus கூறுகிறது. Hexham – Maitland சாலையில் உள்ள ஒரு மொபைல்...

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

மெல்பேர்ணில் டிராம் பயணிகளுக்கு ஒரு நற்செய்தி

மெல்பேர்ணின் பொதுப் போக்குவரத்து அமைப்பில் Mikey Card Reader புதுப்பிப்புகள் மற்றும் புதிய டிராம்களை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட பெரிய மாற்றங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. அதன்படி,...

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...