சிறப்பு கூண்டுகளில் அடைத்து வைக்கப்படும் கூண்டு முட்டைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை 2036ஆம் ஆண்டு முதல் நிரந்தரமாக அமல்படுத்த அனைத்து மாநில விவசாயத்துறை அமைச்சர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
அவர்கள் இன்று மத்திய விவசாயத்துறை அமைச்சர் முர்ரே வாட் தலைமையில் சந்தித்து கலந்துரையாடி அங்குதான் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த முடிவை நடைமுறையில் செயல்படுத்துவதில், ஒவ்வொரு மாநில அளவிலும் சிறிய திருத்தங்களைச் செய்ய இந்த தேதிகள் மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு அமல்படுத்தப்படுவதால் ஆஸ்திரேலியாவில் முட்டை விலை கணிசமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தற்போது பல்பொருள் அங்காடிகளில் விற்பனை செய்யப்படும் முட்டைகளில் 40 வீதமானவை கூண்டில் அடைக்கப்பட்ட முட்டைகள் எனவும், 12 முட்டைகள் கொண்ட ஒரு பொதியின் விலை 15 டொலர்கள் வரை உயரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.