இன்ஃப்ளூயன்ஸா நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்புடன், குயின்ஸ்லாந்து மாநில அரசாங்கம் அனைத்து வயதினருக்கும் இலவச காய்ச்சல் தடுப்பூசி வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.
இந்த தீர்மானத்தை எதிர்வரும் சனிக்கிழமை முதல் அமுல்படுத்துவது தொடர்பாக இன்று கூடவுள்ள மாநில அமைச்சரவையில் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட உள்ளது.
இது தொடர்பாக, குயின்ஸ்லாந்து அமைச்சர்கள் – மருத்துவர்கள் மற்றும் சுகாதார குழுக்கள் இன்று காலை பல சுற்று கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர்.
கடந்த 6ஆம் திகதி சன்ஷைன் கோஸ்ட்டைச் சேர்ந்த 11 வயது சிறுமி இன்புளுவன்சா தொற்று காரணமாக உயிரிழந்ததையடுத்து குயின்ஸ்லாந்து அரசாங்கம் இந்த முடிவை எடுக்க தீர்மானித்துள்ளது.
இன்ஃப்ளூயன்ஸா பி தற்போது ஆஸ்திரேலியா முழுவதும் பரவி வருகிறது.
இந்த ஆண்டு இதுவரை குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இத்தகைய நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 15,000 க்கும் அதிகமாக உள்ளது.