Newsபுதுச்சேரி துறைமுகத்தில் இருந்து இலங்கை அகதிகளை ஆஸ்திரேலியா அனுப்ப முயன்ற வழக்கில்...

புதுச்சேரி துறைமுகத்தில் இருந்து இலங்கை அகதிகளை ஆஸ்திரேலியா அனுப்ப முயன்ற வழக்கில் 7 பேர் விடுதலை

-

2010-ம் ஆண்டு இலங்கை அகதிகள் 15 பேரை புதுவை தேங்காய்த்திட்டு துறைமுகத்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு மீன்பிடி படகு மூலம் அனுப்ப சிலர் முயன்றனர்.

இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

வீராம்பட்டினத்தை சேர்ந்த திராவிடர் விடுதலைக்கழக தலைவர் லோகு.ஐயப்பன், தி.மு.க.வை சேர்ந்த சக்திவேல், காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் தேவமணி உட்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதில் 3 பேர் தலைமறைவாகினர். 8 பேர் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளிவந்தனர்.

இதற்கிடையே சக்திவேல், லோகுஐயப்பன், தேவமணி ஆகியோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. இதிலிருந்து விடுவிக்கக்கோரி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அவர்கள் கடிதம் எழுதினர்.

இதன்பின் 3 பேரும் அந்த சட்டத்திலிருந்து விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு ஆட்கடத்தல் வழக்கு புதுவை தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மோகன், ஆட்கடத்தல் வழக்கு நிரூபிக்கப்படாததால், அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக அறிவித்தார். வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தேவமணி 2021-ல் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

கிறிஸ்துமஸ் பண்டிகைகளின் போது செல்லப்பிராணிகளை பாதிக்கும் மனச்சோர்வு

கிறிஸ்துமஸ் காலத்தில் செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் மறைக்கப்பட்ட ஆபத்துகள் குறித்து ஆஸ்திரேலிய கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வீடுகளில் வசிக்கும் செல்லப்பிராணிகள் அதிக சத்தம், தெரியாத விருந்தினர்களின் வருகை, பட்டாசு...

NSW நாடாளுமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள்

நீண்ட விவாதத்திற்குப் பிறகு, நியூ சவுத் வேல்ஸ் (NSW) பாராளுமன்றம் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் துப்பாக்கிச் சட்ட சீர்திருத்தங்களின் புதிய தொகுப்பை நிறைவேற்றுவதில் வெற்றி பெற்றுள்ளது. பசுமைக்...

விக்டோரியாவில் கிறிஸ்துமஸ் பயணத்தை எளிதாக்க கூடுதல் சேவைகள்

அதிகரித்து வரும் விமானக் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் விலைகள் காரணமாக, இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் விக்டோரிய மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பொதுப் போக்குவரத்தை...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...