Newsகடலில் நாயுடன் 2 மாதங்கள் தத்தளித்த அவுஸ்திரேலிய மாலுமி

கடலில் நாயுடன் 2 மாதங்கள் தத்தளித்த அவுஸ்திரேலிய மாலுமி

-

அவுஸ்திரேலிய மாலுமி ஒருவர் இரண்டு மாதங்களாக தன்னுடைய நாயுடன் பசிபிக் கடலில் உயிரை பிடித்து கொண்டு தத்தளித்த நிலையில், அவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரை சேர்ந்த 51 வயதான டிம் ஷடாக் (Tim Shaddock) என்ற மாலுமி தன்னுடைய பெல்லா(Bella) என்ற வளர்ப்பு நாயுடன் கடந்த ஏப்ரல் மாதத்தில் மெக்சிகோவில் இருந்து பிரெஞ்சு பாலினேசியா-வுக்கு படகில் புறப்பட்டுள்ளார்.

ஆனால், டிம் ஷடாக் பயணத்தை தொடங்கிய சில வாரங்களுக்கு பிறகு அவருடைய படகு புயலால் கடுமையாக சேதமடைந்தது.

கிட்டத்தட்ட 6000 கி.மீ நெடும் பயணத்தை மெக்சிகோவில் இருந்து தொடங்கிய டிம் ஷடாக்-க்கு அதிர்ச்சி தரும்படியாக ஏற்பட்ட மோசமான வானிலை அவரது படகில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் பிரிவை சேதப்படுத்தியது.

இதனால் அவரும், அவரது வளர்ப்பு நாய் பெல்லா-வும் வடக்கு பசிபிக் பெருங்கடலில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டது.

இரண்டு மாதங்களாக கடலில் மிதந்த படி தத்தளித்த டிம் ஷடாக் உயிருடன் பிடித்த மீன்களை சாப்பிட்டும், மழை தண்ணீரையும் குடித்தும் உயிர் பிழைத்து வந்துள்ளார்.

காணாமல் போன அவுஸ்திரேலிய மாலுமி டிம் ஷடாக்கை ஹெலிகாப்டர் ஒன்று கண்டதை தொடர்ந்து, அவரும், அவருடைய வளர்ப்பு நாயும் இந்த வாரம் மீன்பிடி இழுவை படகு ஒன்றின் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

டிம் ஷடாக் மீட்கப்பட்ட போது மெலிந்த உடலுடனும், மிக நீண்ட தாடியுடனும் காணப்பட்டார், அப்போது அவரை பரிசோதித்த மீட்பு படகில் இருந்த மருத்துவர், அவர் மிதமான பாதிப்புகளுடன் நல்ல நிலையில் இருப்பதாக அவுஸ்திரேலிய செய்தி நிறுவனமான 9நியூஸிடம் தெரிவித்தார்.

மீட்பு பிறகு அவரிடம் இருந்து 9 நியூஸ் பெற்ற வீடியோவில் பேசிய அவர், மிகவும் கடுமையான சோதனையை நான் கடலில் அனுபவித்து இருக்கிறேன், எனக்கு நல்ல ஓய்வும், நல்ல உணவும் தேவைப்படுகிறது, மற்றப்படி நான் நல்லபடியாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மீட்பு படகு மெக்சிகோவுக்கு திரும்பிய நிலையில், அவருக்கு கூடுதல் மருத்துவ உதவிகள் தேவைப்பட்டால் அவர் சிகிச்சைக்கு சேர்க்கப்படலாம் என தெரிவித்துள்ளது.

Latest news

கிறிஸ்துமஸ் பண்டிகைகளின் போது செல்லப்பிராணிகளை பாதிக்கும் மனச்சோர்வு

கிறிஸ்துமஸ் காலத்தில் செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் மறைக்கப்பட்ட ஆபத்துகள் குறித்து ஆஸ்திரேலிய கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வீடுகளில் வசிக்கும் செல்லப்பிராணிகள் அதிக சத்தம், தெரியாத விருந்தினர்களின் வருகை, பட்டாசு...

NSW நாடாளுமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள்

நீண்ட விவாதத்திற்குப் பிறகு, நியூ சவுத் வேல்ஸ் (NSW) பாராளுமன்றம் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் துப்பாக்கிச் சட்ட சீர்திருத்தங்களின் புதிய தொகுப்பை நிறைவேற்றுவதில் வெற்றி பெற்றுள்ளது. பசுமைக்...

விக்டோரியாவில் கிறிஸ்துமஸ் பயணத்தை எளிதாக்க கூடுதல் சேவைகள்

அதிகரித்து வரும் விமானக் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் விலைகள் காரணமாக, இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் விக்டோரிய மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பொதுப் போக்குவரத்தை...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...

விக்டோரியாவில் கிறிஸ்துமஸ் பயணத்தை எளிதாக்க கூடுதல் சேவைகள்

அதிகரித்து வரும் விமானக் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் விலைகள் காரணமாக, இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் விக்டோரிய மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பொதுப் போக்குவரத்தை...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...