விக்டோரியா மாநில காவல்துறை மெல்போர்ன் நகரை மையமாகக் கொண்ட ஒரு பெரிய அளவிலான போதைப்பொருள் வலையமைப்பைச் சோதனை செய்ய முடிந்தது.
இங்கு 09 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து வாள்கள் – துப்பாக்கிகள் – போதைப்பொருள்கள் மற்றும் 750,000 டொலர்களும் காணப்பட்டன.
கிட்டத்தட்ட 10 மாதங்களாக நடத்தப்பட்ட விசாரணையின் விளைவாக இந்தக் குழு கைது செய்யப்பட்டது.
அவர்கள் மெல்போர்ன் நகரம் முழுவதும் ஐஸ் மற்றும் ஹெராயின் விநியோகம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரதான சந்தேக நபரால் சுமார் ஒரு இலட்சம் டொலர் பெறுமதியான கைப்பைகள் மற்றும் நகைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.