தேர்வில் தோல்வி அடையும் பல்கலைக் கழக மாணவர்கள் கல்விக்கடனுக்கு விண்ணப்பிப்பதை தடுக்கும் விதிகளை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பல தரப்பினரின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சர் ஜேசன் கிளேர் தெரிவித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டில், அன்றைய ஸ்காட் மாரிசன் அரசாங்கத்தால், அவர்கள் படிக்கும் பாடங்களில் பாதிக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடையும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கடன் வழங்குவதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது.
இதற்கிடையில், ஆஸ்திரேலிய பணியாளர்களில் பட்டம் பெற்றவர்களின் சதவீதம் 2050 ஆம் ஆண்டளவில் தற்போதைய 36 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மண்டல பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு பல்கலைக்கழக கல்வி தடைகளை நீக்க மத்திய அரசு தயாராகி வருகிறது.
இது தொடர்பான முன்மொழிவுகள் அடங்கிய அறிக்கை வருட இறுதிக்குள் கல்வி அமைச்சரிடம் கையளிக்கப்பட உள்ளது.