ஜேர்மன் தலைநகர் பெர்லினில் பெண் சிங்கம் ஒன்று நடமாடும் காட்சிகள் வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து, அது குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெர்லினில், மரங்கள் அடர்ந்த பகுதி ஒன்றில், பெண் சிங்கம் ஒன்று காட்டுப்பன்றி ஒன்றை உண்ணும் காட்சிகள் வெளியாகி திகிலை ஏற்படுத்தியுள்ளன.
நூற்றுக்கும் அதிகமான பொலிசார் அந்த சிங்கத்தைப் பிடிப்பதற்காக களமிறங்கியுள்ளார்கள். பொலிசாரும் வேட்டைக்காரர்களும் சிங்கத்தின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்காக சம்பந்தப்பட்ட பகுதியில் கூடியுள்ளார்கள்.
இந்நிலையில், மக்கள் வீடுகளுக்குள் பத்திரமாக இருக்குமாறும், பெர்லினின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள வனப்பகுதிகளைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளார்கள்.
இன்னொரு பக்கம், சர்க்கஸ் நிறுவனங்கள், வன விலங்கு காப்பகங்களிலிருந்து சிங்கம் எதுவும் தப்பிக்கவில்லை என்பதையும் உறுதி செய்யபட்டுள்ளதால் இந்த சிங்கம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து குழப்பமும் உருவாகியுள்ளது.