Newsபயிற்சியின்போது கழுத்தில் எடை விழுந்தி ஜிம் பயிற்சியாளர் அதிர்ச்சி மரணம்

பயிற்சியின்போது கழுத்தில் எடை விழுந்தி ஜிம் பயிற்சியாளர் அதிர்ச்சி மரணம்

-

இந்தோனேசியாவைச் சேர்ந்த ஜிம் பயிற்சியாளர் கழுத்தில் எடை கருவி விழுந்ததில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தோனேசியாவின் பாலி நகரைச் சேர்ந்தவர் ஜெஸ்டின் விக்கி (33 வயது). ஜிம் பயிற்சியாளரான இவர், உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பிரபலமானார்.

கடந்த 15ஆம் திகதி வழக்கமான உடற்பயிற்சியில் ஜெஸ்டின் ஈடுபட்டிருந்தபோது எடை தூக்கும் கருவியை (barbell) வைத்து பயிற்சி மேற்கொண்டார்.

அப்போது திடீரென எடை தூக்கும் கருவி ஜெஸ்டினின் கழுத்தில் விழுந்துள்ளது. இதனால் அவரது கழுத்து முறிந்தது.

இதன் காரணமாக சில நிமிடங்களில் ஜெஸ்டின் சம்பவ இடத்தியிலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் ஜெஸ்டினின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபலமான ஜிம் பயிற்சியாளர் எடை தூக்கும் கருவி விழுந்து மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...