மேற்கு ஆஸ்திரேலியாவின் சில தொலைதூரப் பகுதிகளில், சுமார் 95 சதவீத பள்ளிகளில் மாணவர்களின் வருகை கணிசமாகக் குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு 63 சதவீதமாக இருந்த வருகை சதவீதம் தற்போது 24 சதவீதமாக குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
2020 ஆம் ஆண்டு கோவிட் தொற்றுநோய் வருகையுடன் இந்த நிலைமை மோசமடையத் தொடங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குடும்பப் பிரச்சனைகள், பொருளாதாரப் பிரச்சனைகள் போன்றவற்றால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையை உடனடியாக மாற்றாவிட்டால் மேற்கு அவுஸ்திரேலியாவின் கல்வித்தரம் கடும் பின்னடைவை சந்திக்க நேரிடும் என பிராந்திய தலைவர்கள் எச்சரிக்கின்றனர்.