வாடிக்கையாளர்களுக்கு தவறான தகவல்களை வழங்கியதாக கோஸ்ட்கோ ஆஸ்திரேலியா ஸ்டோர் சங்கிலிக்கு $33,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் விற்கும் நண்டுகள் ஆஸ்திரேலியாவில் பிடிபட்டதாக லேபிள்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், ஆஸ்திரேலிய நுகர்வோர் ஆணையம் நடத்திய விசாரணையில், இந்த நண்டுகள் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என்பது உறுதி செய்யப்பட்டது.
இதனை சரி செய்யுமாறு 2 தடவைகள் எச்சரித்திருந்த போதும் அதனை புறக்கணித்த பின்னரே இந்த அபராதம் அறவிடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் விற்கப்படும் தயாரிக்கப்பட்ட கடல் உணவுகளின் பூர்வீகத்தை நுகர்வோருக்கு தெரிவிக்க சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு இது ஒரு கட்டாய சட்டமாகும்.
எனவே, சம்பந்தப்பட்ட கடல் உணவுகள் ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்படுகிறதா அல்லது வேறு நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதா என்பதை உணவுப் பொதிகளில் தெளிவாகக் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்படும்.
தற்போது, சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்படும் கடல் உணவுகளுக்கு மட்டுமே இந்த சட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில், அனைத்து உணவகங்கள்-கஃபேக்கள் மற்றும் ஹோட்டல்களுக்கும் இதே விதி விதிக்கப்பட உள்ளது.