Sportsவிராட் கோலிக்கு பாராட்டுக்கள் தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்

விராட் கோலிக்கு பாராட்டுக்கள் தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்

-

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விராட் கோலி அபாரமாக விளையாடி சதம் அடித்தார்.

அவர் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாட்டு மண்ணில் டெஸ்டில் சதம் அடித்துள்ளார். கடைசியாக 2018 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் மைதானத்தில் சதம் அடித்தார்.

34 வயதான விராட் கோலி 111-வது டெஸ்டில் 29-வது சதத்தை பதிவு செய்தார்.

இதன்மூலம் அவர் பிராட்மேன் சாதனையை சமன் செய்தார்.

பிராட்மேன் 52 டெஸ்டில் 29 சதம் அடித்து இருந்தார். டெஸ்டில் அதிக சதம் அடித்த வீரர்களில் விராட், பிராட்மேனுடன் இணைந்து 16-வது இடத்தில் உள்ளார்.

500-வது சர்வதேச போட்டியில் சதம் அடித்த விராட் கோலியை கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் கூறும்போது,

‘மற்றொரு நாள், மற்றொரு சதத்தை விராட் கோலி எடுத்துள்ளார். அவரது ஆட்டம் சிறப்பாக இருந்தது’ என்றார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...