ஆஸ்திரேலியாவில் 11 ஆண்டுகளுக்கு பிறகு பணவீக்கம் உச்சத்தை தொட்டுள்ளது. 2022 ம் ஆண்டில் நாட்டின் பணவீக்கம் 7 சதவீதத்தை எட்டும் என ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி கவர்னர் பிலிப் லோவ் எச்சரித்துள்ளார். பணவீக்கம், ஆஸ்திரேலியா முன்பு இருக்கும் மிகப் பெரிய சவால் என பெடரல் பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் எச்சரித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் உள்ள அமெரிக்க வர்த்தக சபையில் உரையாற்றிய ஆர்பிஏ தலைவர், 2022 ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் பணவீக்கம் 6 சதவீதத்தை எட்டி உச்சம் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மே மாத துவக்கத்தில் ஆரம்பமான பெட்ரோல் விலை அதிகரிப்பு வானளாவிய அளவிற்கு செல்ல துவங்கி உள்ளது.
தற்போது 5,1 சதவீதமாக இருக்கும் பணவீக்கம், டீசம்பர் மாத காலாண்டில் 7 சதவீதமாக உச்சம் தொடும். ஆனால் அடுத்த ஆண்டு துவக்கத்தில் பணவீக்கம் குறையலாம் என எதிர்பார்க்கிறேன். இருந்தாலும் பணவீக்கம் சாதாரண நிலைக்கு திரும்ப இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம். பணவீக்கம் விகிதம் 2 முதல் 3 சதவீதம் என்ற அளவை அடைய இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். அடுத்த இரண்டு ஆண்டுகளில் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. சகஜ நிலை திரும்பும் வரை மக்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே இதை கூறிகிறேன் என்றார்.
பணவீக்கம் குறைவதற்கு முன் நிலைமை மோசமடையலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் தொழில் துறையில் சரக்கு மற்றும் சேவைகள், விநியோக கட்டணம் விண்ணை தொடும் நிலையில் உள்ளது. குறிப்பாக அடுத்த 6 அல்லது ஒரு வருடம் மிகப் பெரிய சவால்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம். இப்போது என்ன தேவை என்றால், கொஞ்சம் பொறுமை, சில விடாமுயற்சி, நிறைய ஒத்துழைப்பு மற்றும் ஒன்றிணைந்து உழைத்தல் ஆகியன தான்.
ஆஸ்திரேலியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது. இப்போது தேவையெல்லாம், இதை மேலும் மோசமாக விடாமல் தடுப்பது தான் என ஆர்பிஏ தலைவர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் தற்போது அதிகரித்துள்ள பணவீக்கத்தால் போக்குவரத்து செலவீனங்கள் 4.2 சதவீதத்தில் இருந்து 13.7 சதவீதமாகவும், வீட்டு கட்டணம் 2.7 சதவீதத்தில் இருந்து 6.7 சதவீதமாகவும், வீட்டு தேவைகளுக்கான விலை 1.1 சதவீதத்தில் இருந்து 4.9 சதவீதமாகவும் அதிகரிக்கலாம். கல்வி, உணவு, மருத்துவம் போன்ற அனைத்தின் விலைவாசிகளும் உயர வாய்ப்புள்ளது.
பணவீக்க உயர்வால் நாட்டின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கபப்ட்டுள்ளது. இதனால் மக்களின் வருமானம் குறைந்துள்ளது. இது தினசரி தேவைகளுக்காக குறைந்த அளவில் சம்பாதிக்கும் மக்களின் நிலையை மேலும் மோசமாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.