பிரேசிலை சேர்ந்த இம்மானுவேல் என்ற இளம் பெண் தனது கைத்தொலைபேசியுடன் வெளியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஒரு இளைஞர் அந்த கைத்தொலைபேசியை பறித்து கொண்டு ஓடியுள்ளார். ஐயோ திருடன் ஐயோ திருடன் என்று கத்தியும் பலனில்லை.
ஆனால், கைத்தொலைபேசியை பறித்து கொண்டு ஓடிய திருடனோ கொஞ்ச நேரம் ஓடிய பிறகு என்ன போன் நாம் திருடியது என்பதை அந்த கைத்தொலைபேசியை எடுத்து பார்த்துள்ளார்.
அப்போது, அந்த கைத்தொலைபேசி சொந்தகாரரான இம்மானுவேல் போட்டோ அதில் இருப்பதை பார்த்து, ஆகா என்ன ஒரு அழகான பெண், இவரிடம் திருடி தப்பு செய்துவிட்டோமே என்று வருந்தியுள்ளார்.
பின்னர் அந்த பெண்ணிடம் மன்னிப்புகேட்டு தொலைபேசியை திருப்பி கொடுத்துள்ளார். இதில் இம்மானுவேலுக்கு அந்த நபரை பிடித்து போய்விட்டது. ஐகத்தொலைபேசியை திருப்பி கொடுத்தவர் பதிலாக அவரது இதயத்தை திருடி விட்டார்.
கடந்த இரண்டு வருடங்களாக இருவரும் காதலித்து வருகிறார்கள். இது குறித்து காதல் ஜோடி பேட்டி வழங்கியுள்ளனர். இந்த வீடியோவை ஒரு பிரேசில் ஊடகவியலாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரேசிலில் மட்டுமே இப்படியெல்லாம் நடக்கும் என்று பதிவிட்டுள்ளார்.