Newsஅமெரிக்காவில் நாய் கூண்டில் அடைத்து 6 குழந்தைகள் சித்திரவதை

அமெரிக்காவில் நாய் கூண்டில் அடைத்து 6 குழந்தைகள் சித்திரவதை

-

அமெரிக்காவின் நிவேடா மாநிலத்தில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில், பெற்ற குழந்தைகளையே சித்திரவதை செய்த குற்றத்திற்காக டிராவிஸ் டாஸ் (31) மற்றும் அவர் மனைவி அமண்டா ஸ்டாம்பர் (33) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

குறித்த குழந்தைகள் கடுமையாக தாக்கப்பட்டு, உணவளிக்கப்படாமல், நாய் கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டனர்.

வேலி வியூ பவுல்வர்டு மற்றும் ஃபிளமிங்கோ சாலைக்கு அருகிலுள்ள ஒரு மருந்துக்கடையில் இருந்து அமண்டா ஸ்டாம்பர் அவசர உதவி எண்ணான 911ஐ அழைத்திருக்கிறார்.

பொலிஸார் அங்கு சென்று, பல நாய்களுடன் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த குழந்தைகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அதன் பின்னர் மேற்கொண்ட விசாரணையில், பெற்றோரின் குற்றம் தெரிய வந்ததால், 2 வயது முதல் 11 வயது வரையுள்ள 7 குழந்தைகளுக்கு பெற்றோரான இருவரும் கைது செய்யப்பட்டனர்.

குழந்தைகளில் ஒருவர் தந்தையால் மிகவும் மோசமாக தாக்கப்பட்டதால், அவர் இறந்துவிட்டதாக டிராவிஸ் நினைத்திருக்கிறார்.

கூண்டிற்குள் இருந்த 2 குழந்தைகளில் ஒரு குழந்தையின் கண்கள் வீங்கி மூடப்பட்டு இருந்தது. அக்குழந்தை உடல் முழுவதும் காயங்களுடன் தீவிர ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

ஃபிளமிங்கோ சாலைக்கு அருகில், ஒரு படுக்கையறை மற்றும் ஒரு குளியலறை கொண்ட ஒரு அபார்ட்மெண்டில் அத்தம்பதியினர் தங்கள் 7 குழந்தைகளுடன் வசித்து வந்தனர்.

முன்னராகவே பொலிஸாரிடம் ஏன் தெரிவிக்கவில்லை என பொலிஸார் கேட்டனர். இது குறித்து பொலிஸாரிடம் அமண்டா தெரிவித்திருப்பதாவது:

‘நானும் அவரால் பாதிக்கப்பட்டேன். கைது செய்யப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு எனக்கும், எனது 6 வளர்ப்பு பிள்ளைகளுக்கும் எதிரான உடல் ரீதியான துன்புறுத்தல் அதிகரித்தது.

எனது உயிருக்காகவும் எனது மற்ற குழந்தைகள் மற்றும் எனது குடும்பத்திற்காகவும் நான் பயந்ததனால் முன்னதாகவே காவல்துறையை நான் அழைக்கவில்லை. என் கணவர், பெல்டாலும், கயிறுகளாலும் மற்றும் கனம் வாய்ந்த பாத்திரங்களாலும் குழந்தைகளை அடிப்பார். ஏன அவர் தெரிவித்தார்.

நன்றி தமிழன்

Latest news

சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள் குறித்து இன்ஸ்டாகிராம் பயனர்கள் எச்சரிக்கை

கடவுச்சொல் மீட்டமைப்புகளைக் கேட்கும் சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள் குறித்து மில்லியன் கணக்கான பயனர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு இன்ஸ்டாகிராம் எச்சரித்துள்ளது. கடவுச்சொல் மீட்டமைப்பு மின்னஞ்சல்களைக் கோராமலேயே பெறுவது குறித்து பயனர்கள்...

குயின்ஸ்லாந்திற்குள் நுழையும் Koji புயல் – 2 பகுதிகளுக்கு திடீர் வெள்ள அபாயம்

வெப்பமண்டல சூறாவளி Koji குயின்ஸ்லாந்து மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது. அடுத்த சில மணிநேரங்களில் Ayr மற்றும் Bowen-ஐ சுற்றியுள்ள குடியிருப்பாளர்கள் மிக அதிக மழையால் பாதிக்கப்படுவார்கள் என்றும், இது...

புதிய Influenza தொற்றுநோய் – காய்ச்சல் நோயாளிகள் அதிகரிப்பு

'Super-K' அல்லது subclade-K எனப்படும் புதிய இன்ஃப்ளூயன்ஸா திரிபு, காய்ச்சல் நோயாளிகளில் அசாதாரண அதிகரிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று தொற்றுநோயியல் நிபுணர்கள் கூறுகின்றனர். WHO ஒத்துழைப்பு மையத்தின் இன்ஃப்ளூயன்ஸா...

காட்டுத்தீயின் போது பகுதியில் கண்டெடுக்கப்பட்ட Longwood மனித உடல்

விக்டோரியா மாநிலம் முழுவதும் பரவி வரும் கடுமையான காட்டுத்தீ நிலைமை இப்போது ஒரு அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. Longwood பகுதியில் பலத்த எரிந்த பகுதியில் ஒரு மனித...

காட்டுத்தீயின் போது பகுதியில் கண்டெடுக்கப்பட்ட Longwood மனித உடல்

விக்டோரியா மாநிலம் முழுவதும் பரவி வரும் கடுமையான காட்டுத்தீ நிலைமை இப்போது ஒரு அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. Longwood பகுதியில் பலத்த எரிந்த பகுதியில் ஒரு மனித...

மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள சுற்றுலா நகரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல்

மேற்கு ஆஸ்திரேலியாவின் தென்மேற்கில் உள்ள பிரபலமான சுற்றுலா நகரங்கள் அதிக போக்குவரத்து நெரிசலால் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றன. Dunsborough மற்றும் Busselton போன்ற நகரங்களில் உள்ள கடற்கரைகள்...