அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புவதற்கு தயாராக இருந்த சுமார் 10 டன் ஐஸ் வகை போதைப்பொருள் மெக்சிகோவில் கைப்பற்றப்பட்டுள்ளது.
7,200 மதுபாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டு திரவ வடிவில் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த போதைப்பொருள் கையிருப்பின் பெறுமதி இதுவரை மதிப்பிடப்படவில்லை எனவும், பல பில்லியன் டொலர்கள் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டும் மெக்சிகோவில் இருந்து ஹாங்காங் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்ட ஐஸ் வகை போதைப்பொருள் ஒன்று ஹாங்காங் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.
இதன் மதிப்பு 140 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டது.