News2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் கூட்டாட்சி பொதுத் தேர்தல் இருக்காது

2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் கூட்டாட்சி பொதுத் தேர்தல் இருக்காது

-

இந்த ஆண்டு இறுதிக்குள் கூட்டாட்சி பொதுத் தேர்தல் நடத்தப்படாது என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸ் வலியுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், அடுத்த வாரம் தொழிற்கட்சி அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த வீட்டுவசதி சட்டமூலம் இரண்டாவது தடவையாக தோற்கடிக்கப்படுமானால் தேர்தல் நடத்தப்படும் அபாயத்தை நிராகரிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, இந்த மசோதா பாராளுமன்றத்தில் முதல் முறையாக பரிசீலிக்கப்பட்டபோது தோற்கடிக்கப்பட்டது.

அடுத்த வாரம் பாராளுமன்றம் மீண்டும் கூடும் போது இந்த மசோதா மீண்டும் பிரதிநிதிகள் சபையில் சமர்ப்பிக்கப்படும்.

வரும் அக்டோபரில் விவாதத்தின் முடிவில் வாக்கெடுப்பு நடத்தப்படும், மசோதா தோற்கடிக்கப்பட்டால், பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அவசர பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுக்க வேண்டும்.

பசுமைக் கட்சியினர் இந்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர், வீட்டு வாடகை உயர்வுக்கு அதிகபட்ச வரம்பு இருக்க வேண்டும் என்று வாதிட்டனர்.

தொழிற்கட்சி அரசாங்கம் சமூக வீட்டுத் திட்டத்திற்காக $02 பில்லியன் முதலீட்டில் இந்த மசோதாவை முன்மொழிகிறது.

2016ம் ஆண்டும் இதே மசோதா இரண்டு முறை தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...