அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு ஏவுகணைகளை தயாரித்து ஏற்றுமதி செய்யும் திட்டத்தை தொடங்க ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது.
அடுத்த 02 ஆண்டுகளில் இது ஆரம்பிக்கப்படும் என பிரதிப் பிரதமர் Richard Malles இன்று பிரிஸ்பேனில் அறிவித்தார்.
அமெரிக்காவுடனான தொடர்ச்சியான விரிவான கலந்துரையாடலின் முடிவில் இது அறிவிக்கப்பட்டது.
இதற்காக அமெரிக்காவும் 04 பில்லியன் டாலர்களை வழங்க உள்ளது.
உக்ரைன் போர் போன்ற சந்தர்ப்பங்களில் கூடுதல் ஆயுதங்களை சேமித்து வைக்க வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது.