Newsஇந்திய - ஜப்பான் ஆய்வில் இமயமலை தொடர்பில் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் உண்மைகள்

இந்திய – ஜப்பான் ஆய்வில் இமயமலை தொடர்பில் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் உண்மைகள்

-

பெங்களூருவைச் சேர்ந்த இந்திய அறிவியல் கழகம் மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிகட்டா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இமயமலையின் உச்சியில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இமயமலையில் உச்சியில் உள்ள படிமங்களை ஆய்வு செய்தபோது, அதில் ஒன்றில் நீர்த் துளி சேகரமாகி இருந்ததை அவர்கள் கண்டறிந்தனர்.

அந்த நீர்த் துளியை ஆய்வுக்கு உட்படுத்திய நிலையில், அது 60 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது என்பது தெரியவந்துள்ளது.

அங்கு, 60 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் இருந்திருக்கக்கூடும், அந்தக் கடலிலிருந்து அந்த நீர்த் துளி எஞ்சி இருக்கக்கூடும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர்

இது குறித்து பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் புவி அறிவியல் மையத்தின் ஆய்வு மாணவர் பிரகாஷ் சந்திர ஆர்யா தெரிவிக்கையில் ,

பழமையான கடலின் ஆண்டை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். ஆனால், அந்தக் கடலின் தன்மை குறித்து பெரிய விவரங்கள் தெரியவில்லை. தற்போது இருக்கும் கடல்களுக்கும் அப்போதைய கடலுக்கும் என்ன வேற்றுமை, என்ன ஒற்றுமை என்பது குறித்த விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை.

இந்த விவரங்கள் முழுமையாக கிடைக்கும்பட்சத்தில், அது புவியின் காலநிலை வரலாற்றை புரிந்துகொள்ள உதவியாக அமையும் என பிரகாஷ் சந்திர ஆர்யா தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் மூடப்பட்ட இரண்டு பெரிய வேர்க்கடலை தொழிற்சாலைகள்

Bega குழுமம் அதன் Peanut தொழிற்சாலைகளை மூட நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் சுமார் 150 ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குயின்ஸ்லாந்தின் Kingaroy மற்றும்...

சீனாவில் பாலர் பள்ளியில் உணவு விஷம் ஏற்பட்டதால் 233 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

வடமேற்கு சீனாவில் உள்ள ஒரு பாலர் பள்ளியில் ஏற்பட்ட உணவு விஷத்தால் 233 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உணவை அலங்கரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு வகை வண்ணப்பூச்சு குழந்தைகளின்...

திரும்ப அழைக்கப்பட்டுள்ள Power bank மாடல்கள்

பல்வேறு Power Bankகள் அதிக வெப்பமடைந்து தீப்பிடித்து எரியக்கூடும் என்ற அச்சம் இருப்பதால், அவற்றைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறு நுகர்வோருக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது. Amazon, eBay மற்றும் Anker...

3,800 ஆண்டுகள் பழமையான தொலைந்து போன நகரம் கண்டுபிடிப்பு

பெருவின் வடக்கு பாரன்கா பகுதியில், கிமு 1800 முதல் 1500 வரையிலான காலத்தைச் சேர்ந்த ஒரு பழங்கால, தொலைந்து போன நகரத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பெனிகோ...

விக்டோரியாவில் 14 ஆண்டுகளில் முதல் முறையாக அதிகரித்துள்ள சாலை விபத்து இறப்புகள்

கடந்த 72 மணி நேரத்தில் விக்டோரியாவில் நடந்த பத்து விபத்துகளில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மெல்பேர்ணின் வடகிழக்கில் நேற்று காலை இரண்டு வாகனங்கள் மோதியதில்...

மூன்றாம் உலகப் போர் குறித்து நேட்டோ எச்சரிக்கை

சீன ஜனாதிபதியும் ரஷ்ய பிரதமரும் ஒரே நேரத்தில் ஆக்கிரமிப்பதன் மூலம் மூன்றாம் உலகப் போர் தொடங்கும் என்று நேட்டோ தலைவர் மார்க் ருட்டே கூறுகிறார். சீன மற்றும்...