ஆஸ்திரேலியாவில் சுமார் 137,000 பெற்றோர் விசா விண்ணப்பங்கள் இன்னும் பரிசீலிக்கப்படவில்லை என்று சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்துகிறது.
இது ஆஸ்திரேலிய விசா முறையின் பெரும் குறையாக இருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.
பெற்றோர் விசா விண்ணப்பங்கள் குவிந்து கிடப்பதால், ஆஸ்திரேலியாவில் பெற்றோர் விசாவைப் பெற ஒருவர் 30 முதல் 50 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
பெற்றோர் விசாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது இந்த விசாவை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், பெற்றோருக்கு குறுகிய கால விசாக்களை வழங்குவதற்காக பெற்றோருக்கான நிரந்தர வதிவிட விசாவை முற்றாக நீக்குவதற்கு முன்மொழியப்பட்டது.
ஆஸ்திரேலியாவின் வருடாந்திர குடியேற்ற விசா ஒதுக்கீட்டில், ஆண்டுக்கு சுமார் 8,500 பெற்றோர் விசாக்கள் மட்டுமே ஒதுக்கப்படுகின்றன.
தற்போது குவிந்து கிடக்கும் விண்ணப்பங்களின் அளவுடன் ஒப்பிடும் போது, அந்த ஒதுக்கீட்டின் அளவு மதிப்பு குறித்தும் சிக்கல் எழுகிறது.