அவுஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சிறுவன் ஒருவனின் பிறந்தநாளில் மர்ம கும்பல் ஒன்று அவனிடம் கொள்ளையடித்து விட்டு கத்தியால் தாக்கி விட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் 16 வயதுடைய இந்திய வம்சாவளி சிறுவன் ஒருவன் தன்னுடைய பிறந்தநாளில் இரண்டு நண்பர்களுடன் கூடைப்பந்து விளையாடி கொண்டு இருந்த போது மர்ம கும்பலால் கத்தியால் குத்தி தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரியான் சிங் (Rhyan Singh) என்ற சிறுவன் வியாழக்கிழமை அன்று டார்னிட் நகரில் 2 நண்பர்களுடன் விளையாடி கொண்டு இருந்த போது கைதியுடன் மர்ம கும்பல் ஒன்று அவர்களை சூழ்ந்துள்ளது.
7 முதல் 8 பேர் கொண்ட அந்த கும்பல் சிறுவர்களிடம் இருக்கும் மொபைல் போன் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் ரியான் அணிந்து இருந்த புதிய நைக் ஏர் ஜோர்டன் ஸ்நீக்கர்ஸ் ஷீ-வையும் பிடிங்கியுள்ளனர்.
பிறந்த நாள் பரிசாக ரியானுக்கு கிடைத்து இருந்த ஷீவை பறித்து கொண்டதுடன், குடும்பத்துடன் பிறந்தநாள் விருந்துக்கு செல்வதற்கு முன்பு ரியானின் நெஞ்சு எலும்பு பகுதி, கைகள், முதுகு ஆகிய பகுதிகளில் கத்தியால் குத்தி தாக்கியுள்ளனர், மேலும் தலையிலும் அடித்து காயப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் பல காயங்களுடன் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் மர்ம கும்பலை பிடிப்பதற்காக பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.