நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அவசர மருத்துவ சேவை ஊழியர்களின் தொழில்துறை நடவடிக்கை காரணமாக பல முக்கிய விளையாட்டு நிகழ்வுகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று எச்சரிக்கைகள் உள்ளன.
மாநில அரசு ஒப்புக்கொண்ட 4 சதவீத சம்பள உயர்வை நிராகரித்து தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் திட்டமிட முடிவு செய்துள்ளனர்.
அவற்றில் விளையாட்டு போட்டி கடமைகளில் இருந்து விலகுவதும் அடங்கும்.
இதனால் விளையாட்டுப் போட்டிகளுக்கு மிக அத்தியாவசியமான முதலுதவி – ஆம்புலன்ஸ் சேவை – அவசர சிகிச்சை இல்லாமல் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது ஆபத்தான நிலையில் உள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள ரக்பி, கால்பந்து உள்ளிட்ட பல போட்டிகளை நடத்துவது நிச்சயமற்றதாகவே உள்ளது.