Tik Tok மற்றும் WeChat ஆகியவை ஆஸ்திரேலியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இரண்டு வெளிநாட்டு செல்வாக்கு பெற்ற பயன்பாடுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
சமூக ஊடகங்கள் ஊடாக நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் ஊடாக இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து சமூக ஊடக நெட்வொர்க்குகளையும் வெளிப்படையான முறையில் ஒழுங்குபடுத்துவதற்கு புதிய விதிமுறைகளை உருவாக்குவது அல்லது நாடு முழுவதும் அவற்றின் பயன்பாட்டை தடை செய்வது உட்பட 17 பரிந்துரைகள் இதில் அடங்கும்.
மத்திய அரசு இயற்றியுள்ள சட்டங்களை பின்பற்றாத சமூக ஊடக நிறுவனங்களை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.
சீனாவுக்குச் சொந்தமான டிக் டோக், தனிப்பட்ட தரவுகளை தவறாகப் பயன்படுத்துகிறது என்ற சந்தேகத்தைக் கருத்தில் கொண்டு, ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகள் அரசாங்க தொலைபேசிகளில் அதன் பயன்பாட்டைத் தடை செய்துள்ளன.
அரசு திட்டங்களில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரர்களின் போன்களில் அந்த அப்ளிகேஷனை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் இந்த அறிக்கை பரிந்துரை செய்துள்ளது.