விக்டோரியா மாநிலத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு $1 மில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்தத் தவறியது தொடர்பாக சூப்பர் மார்க்கெட் சங்கிலியான Woolworths மீது 1,000 க்கும் மேற்பட்ட குற்றவியல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2018-2021 காலப்பகுதியில் பணிபுரிந்த 1,235 ஊழியர்களுக்கு உரிய கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என விக்டோரியா நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் பெரும்பாலோர் முறையாக கூடுதல் நேர ஊதியம் பெறவில்லை மற்றும் அவர்கள் $250 முதல் $12,000 வரை செலுத்த வேண்டியுள்ளது.
விக்டோரியா சட்டத்தின் கீழ் ஓவர்டைம் சரியாகச் செலுத்தத் தவறுவது ஒரு கிரிமினல் குற்றமாகும், மேலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் எந்தவொரு முதலாளியையும் கடுமையான அபராதத்திற்கு உட்படுத்தலாம்.
வூல்வொர்த்ஸின் சம்பளக் கணக்கீட்டு முறைமையில் ஏற்பட்ட பிழையினால் இந்த குறைவான ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் உள்ளன.