Newsஉக்ரைன் கைதிகளை பாலியல் சித்ரவதை செய்யும் ரஷ்யா

உக்ரைன் கைதிகளை பாலியல் சித்ரவதை செய்யும் ரஷ்யா

-

கடந்த 2022-ம் ஆண்டு ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் கடுமையாக போரிட்டு வருகிறது.

ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த கெர்ஸன் பகுதி உக்ரைன் நாட்டால் மீட்கப்பட்டது. இங்கு ரஷ்யாவால் அடைக்கப்பட்டிருந்த போர் கைதிகளிடம் உக்ரைன் விசாரணை நடத்தியது.

உக்ரைன் அதிகாரிகளுடன் இணைந்து மனித உரிமை சட்டங்களுக்கான குளோபல் ரைட்ஸ் கம்ப்ளையன்ஸ் எனும் சர்வதேச அமைப்பின் மொபைல் ஜஸ்டிஸ் டீம் குழுவினர் செயலாற்றினர்.

இதில் கைதிகளை ரஷ்யா உடல் ரீதியான சித்ரவதைகளுக்கும், பாலியல் துன்புறுத்தல்களுக்கும் ஆளாக்கியதாக இந்த குழு கண்டுபிடித்துள்ளது.

சுமார் 97,000 போர் குற்றச்சாட்டு அறிக்கைகளை உக்ரைன் ஆராய்ந்து ரஷ்யாவை சேர்ந்த 220 பேர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட உக்ரைன் நாட்டவர்களை பல்வேறு விதமாக ரஷ்யர்கள் சித்ரவதை செய்துள்ளனர். கைதிகளை அடிப்பது, அவர்களின் உடலில் மின்சாரம் பாய்ச்சுவது, அவர்களின் பிறப்புறுப்பில் மின்சாரம் செலுத்துவது மற்றும் ஒரு கைதி பாலியல் கொடுமை செய்யப்படுவதை பிற கைதிகளை பார்க்க வைப்பது போன்ற துன்புறுத்தல்களை கையாண்டனர்.

மேலும் கைதிகளின் முகத்தை மெல்லிய துணியால் மூடி மூச்சு திணறும் அளவிற்கு அதிவேகமாக நீரை பாய்ச்சும் ‘வாட்டர் போர்டிங்’ எனப்படும் தீவிர சித்ரவதையையும் கையாண்டனர்.

இக் குற்றச்சாட்டுகளில் பெரும் குற்றம் புரிந்தவர்கள் மீது நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரத்திலுள்ள சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும். இந்த நீதிமன்றம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கு எதிராக ஏற்கனவே கைது உத்தரவு பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவால் கைது செய்யப்பட்டவர்களில் உக்ரைன் இராணுவத்தை சேர்ந்தவர்களை தவிர தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவ பணியாளர்கள், கல்வி பணியில் உள்ளவர்களும் அடங்குவர். ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் ரஷ்யா மறுத்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தும் ரஷ்யா

கடந்த வாரம், அமெரிக்க உளவுத்துறை வலைத்தளமான ஜேன்ஸ், டார்வினுக்கு வடக்கே சுமார் 1,300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தோனேசிய மாகாணமான பப்புவாவில் உள்ள ஒரு விமான...

NSW-ல் இரு பாறைகளுக்கு இடையில் சிக்கிய குழந்தை

நியூ சவுத் வேல்ஸ் வடக்கு கடற்கரையில் பாறைகளில் விழுந்து ஒரு சிறுவன் உயிரிழந்தான். ஆஸ்திரேலியாவில் ஆறு பேர் நீரில் மூழ்கி இறந்ததை அடுத்து குறித்த சிறுவனின் மரணம்...

விண்கல் பொழிவைப் பார்க்க ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு வாய்ப்பு

ஆஸ்திரேலியர்கள் இன்றும் நாளையும் இரவு வானில் விண்கல் பொழிவை காண முடியும் என நாசா தகவல் வெளியிட்டுள்ளது. லிரிட் விண்கல் மழை இரவு வானில் ஒரு மணி...

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

மோசமான வானிலை காரணமாக கிரிக்கெட் போட்டிகள் இடைநிறுத்தப்படாது

மோசமான வானிலை காரணமாக கிரிக்கெட் போட்டிகள் இடைநிறுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதில் அதிகாரிகள் கவனம் செலுத்துகின்றனர். கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாக அதிகாரி டாட் க்ரீன்பெர்க், அதிகாரிகள்...

சிறு வணிகங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் தளர்த்தப்படும் – பீட்டர் டட்டன்

சிறு வணிகங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் தளர்த்தப்படும் என்று ஆஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் கூறுகிறார். சிட்னி ஒலிம்பிக் பூங்காவில் நடைபெற்ற ராயல் ஈஸ்டர் கண்காட்சியில்...