Newsநீல் ஆம்ஸ்ட்ராங் தொடர்பில் வெளியான உண்மை

நீல் ஆம்ஸ்ட்ராங் தொடர்பில் வெளியான உண்மை

-

நிலவில் கால் பதித்த முதல் மனிதரான, அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட் ராங் நிலவில் இறங்கிய தருணத்தில் ஒரு வினோதமான ஒலியைக் கேட்டார். அந்த ஒலி என்னவென்று அப்போது அவருக்குத் தெரியவில்லை. எகிப்துக்கு அவர் ஒரு முறை சுற்றுலா சென்றிருந்தபோது அதே ஒலியை அவர் மீண்டும் கேட்டார். அது மசூதியில் ‘பாங்கு’ சொல்லும் ஒலி. அதன்பின் அவர் இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டார்.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சூரியனில் இருந்து வரும் ஒலியைப் பதிவு செய்தது. அதன்மூலம் ‘ஓம்’ என்பதுதான் சூரியனின் ஒலி என்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஒலி ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு பயணிக்க வேண்டுமானால், ஓர் ஊடகம் தேவை. அது காற்றாகவோ, நீராகவோ, ஏதாவது ஒரு திடப்பொருளாகவோ இருக்கலாம். இயக்க அலைகள் (mechanical waves) வகைப்பாட்டைச் சேர்ந்த ஒலி அலைகள் ஊடுருவிப் பயணிக்க பருப்பொருள் (matter) ஒன்று கட்டாயம் தேவை.

ஆனால், விண்வெளியில் ஒலி அலைகளைச் சுமந்து செல்ல எந்த பருப்பொருளும் இல்லை. விண்வெளியில் வெற்றிடம் மட்டுமே உள்ளது என்பதால் அதில் ஒலி அலைகளால் ஊடுருவிப் பயணிக்க முடியாது.

ஓய்வுபெற்ற இந்திய காவல் பணிகள் அதிகாரியும், புதுவை துணை நிலை ஆளுநருமான கிரண் பேடியும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாசா பதிவு செய்த சூரியனில் ஒலிக்கும் ‘ஓம்’ எனும் ஒலி என்று கூறி ஒரு காணொளியை ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.

அதைப் பலரும் சமூக ஊடகங்களில் எள்ளி நகையாடினர். அது ஒரு போலிச் செய்தி என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

சூரியனின் ஒலி எப்படி இருக்கும்?

சூரியனில் உண்டாகும் அதிர்வுகள் ஏற்படுத்தும் ஒலியை நாசாவின் ஹீலியோபிசிக்ஸ் சயின்ஸ் டிவிசன் (Heliophysics Science Division) வெளியிட்டுள்ளது.

நாசாவின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அந்த ஒலியின் இணைப்பு கீழே உள்ளது.

ஆனால், இந்த ஒலி நேரடியாகப் பதிவு செய்யப்பட்டது அல்ல. பின்பு எவ்வாறு சூரிய அதிர்வுகளின் ஒலி எப்படி இருக்கும் என்று நாசா கண்டறிந்தது?

சூரியனின் உள்புறத்தின் உள்ளேயே இந்த அதிர்வுகள் பயணிக்கும் பாதையை நோக்கிய நாசா அறிவியலாளர்கள் அதை ஒலியாக மாற்றியுள்ளனர் என்று நாசா கூறுகிறது.

நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவில் கால்பதித்தது 1969இல். இந்த வரலாற்று நிகழ்வு நடந்த 14 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 1983இல் கிறித்தவ அமைப்பு ஒன்றைச் சேர்ந்த பில் பார்ஷல் என்பவருக்கு, ஆர்ம்ஸ்ட்ராங்கின் நிர்வாக உதவியாளர் விவியன் வைட் என்பவர் எழுதிய கடிதத்தில் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவில் ‘ஆசன்’ (பாங்கு சொல்லும் ஒலி) சொல்வதைக் கேட்டதாகவும், அவர் இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டார் என்றும் பரவும் செய்தி போலியானது என்று தெரிவித்துள்ளார்.

யார் மனதையும் புண்படுத்தவோ, எந்த மதத்தையும் அவமதிக்கவோ விரும்பாத அதே சூழலில் தாம் மதம் மாறியதாக கூறப்படும் செய்திகள் தவறானவை என்று ஆம்ஸ்ட்ராங் கூறுகிறார் என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எகிப்து, மலேசியா, இந்தோனேசியா மற்றும் பிற நாடுகளின் ஊடகங்கள் உறுதிசெய்யாமல் இந்த செய்தியை வெளியிட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விவியன் வைட், அதை ‘திறமையற்ற இதழியல்’ என்றும் விமர்சித்துள்ளார்.

ஃபர்ஸ்ட் மேன்: தி லைஃப் ஆஃப் நீல் ஏ. ஆம்ஸ்ட்ராங் (First Man: The Life of Neil A. Armstrong) எனும் அவரது அலுவல்பூர்வ வாழ்க்கை வரலாற்று நூலிலும், தாம் இஸ்லாம் மதத்துக்கு மாறியதாகப் பரவும் செய்திகளை ஆம்ஸ்ட்ராங் மறுத்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்தக் கதை சமூக ஊடகங்களும், இணையதளமும் கண்டுபிடிக்கப்படும் முன்னரே பரப்பப்பட்ட புரளிதான்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கான சிறந்த விசா வகை எது தெரியுமா?

ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பொருத்தமான விசா வகை Visitor Visa (Subclass 600) என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. Visitor Visa (Subclass...

NSW ஓட்டுனர்கள் பற்றி வெளியான அதிர்ச்சியான தகவல்

NSW ஓட்டுனர்களில் 10 பேரில் ஒருவர் போதைப்பொருளின் தாக்கத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 12 மாதங்களில் நடத்தப்பட்ட சீரற்ற சோதனைகளில் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக Driving High...

கோடை காலத்தில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு எச்சரிக்கை

எதிர்வரும் கோடை விடுமுறையின் போது மக்கள் துவிச்சக்கர வண்டிகளை பயன்படுத்தும்போது கவனமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரை மலைப் பைக் விபத்துக்களினால் 14...

உலகின் மிகவும் அமைதியான நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா

உலக புள்ளியியல் இணையதளம் குறிப்பிடும் உலகின் அமைதியான நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியாவும் இடம்பெற்றுள்ளது. அந்த தரவரிசையின்படி ஆஸ்திரேலியா 19வது இடத்தை பிடித்துள்ளது. 160 நாடுகளை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த...

கல்விக்கு சிறந்த நகரங்களின் பட்டியலில் மெல்பேர்ண்

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் 2024 ஆம் ஆண்டில் உலகின் சிறந்த கல்வி நகரங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. (QS Best Student Cities 2024) இது சிறந்த பல்கலைக்கழக இணையதளத்தால்...

கோடை காலத்தில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு எச்சரிக்கை

எதிர்வரும் கோடை விடுமுறையின் போது மக்கள் துவிச்சக்கர வண்டிகளை பயன்படுத்தும்போது கவனமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரை மலைப் பைக் விபத்துக்களினால் 14...