Newsட்விட்டருக்கு அபராதம் விதித்த அமெரிக்கா

ட்விட்டருக்கு அபராதம் விதித்த அமெரிக்கா

-

தேர்தல் முறைபாடுகள் தொடர்பில் சிக்கியுள்ள அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் ட்விட்டர் பதிவுகளை வழங்காமல் தாமதம் ஏற்படுத்திய ட்விட்டர் (தற்போதைய ‘எக்ஸ்’) நிறுவனத்துக்கு ரூ.2.89 கோடி அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக எழுந்த முறைபாடு குறித்து ஆய்வு செய்த நீதிபதிகள் குழு, டிரம்ப் மீது வழக்கு தொடுக்க அனுமதி வழங்கியது.

அதன்பேரில் நாட்டை ஏமாற்ற முயன்றது, அதிகாரிகளின் நடவடிக்கைக்கு இடையூறு செய்ய முயன்றது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணைக்காக முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் ட்விட்டர் பதிவுகளை வழங்க கோரி அந்நிறுவனத்துக்கு கொலம்பியா மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஆனால் நீதிமன்றம் வழங்கிய காலக்கெடு முடிவடைந்து 3 நாட்கள் ஆன நிலையில் இன்னும் முழுமையான தகவல்களை அந்நிறுவனம் வழங்கவில்லை.

இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், ‘தகவல்களை முழுமையாக தருவதில் தாமதம் ஏற்படுத்தியது, நீதிமன்ற உத்தரவை அவமதித்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ட்விட்டர் நிறுவனத்துக்கு அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

நன்றி தமிழன்

Latest news

பாலி மற்றும் ஆசிய நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை

பாலி தீவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தட்டம்மை தடுப்பூசியைப் பெறுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். குயின்ஸ்லாந்து சுகாதார அதிகாரிகள் Cairns நகரில் இரண்டாவது தட்டம்மை நோயை உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த...

சீன விஞ்ஞானிகளுக்கு நாசாவில் விதிக்கப்பட்ட தடை!

அமெரிக்க விசாக்களைக் கொண்ட சீன விஞ்ஞானிகள் பிரதிநிதித்துவத் திட்டங்களில் பங்கேற்பதை நாசா தடை செய்துள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் புதிய கொள்கை செப்டம்பர் 5 ஆம் திகதி...

ஜப்பானில் 100 வயதுக்கு மேற்பட்ட 100,000 பேரில், 90% பேர் பெண்கள்

ஜப்பானில் 100 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 99,763 ஐ எட்டியுள்ளது. செப்டம்பர் 1 ஆம் திகதி வெளியிடப்பட்ட ஜப்பானிய சுகாதார அமைச்சக தரவுகளின்படி, இந்த எண்ணிக்கையில் 90%...

ஆஸ்திரேலியாவில் உள்ள முஸ்லிம் சமூகத்திற்கான 54 பரிந்துரைகள் கொண்ட திட்டம்

ஆஸ்திரேலியாவின் முஸ்லிம் சமூகத்தின் மத சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்த ஒரு பெரிய திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் அடங்கிய அறிக்கையை அரசாங்கத்தின் சிறப்புப் பிரதிநிதி Aftab...