ஆஸ்திரேலிய மகளிர் கால்பந்து அணி அரையிறுதியில் வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்து மகளிர் கால்பந்து உலகக் கோப்பையை வெல்ல முடிந்தால், விடுமுறை அறிவிக்கப்படும் என்று பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் உறுதி அளித்துள்ளார்.
நேற்று பிரிஸ்பேனில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியை பார்வையிட பிரதமர் வருகை தந்திருந்த நிலையில், போட்டியில் வெற்றி பெற்றதன் பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த வாரம் தேசிய அமைச்சரவை கூட்டத்தில் தேதி முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பிரதமர் அல்பானீஸ் கூறினார்.
நியூ சவுத் வேல்ஸ் பிரீமியர் கிறிஸ் மின்ன்ஸ் ஏற்கனவே இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
மாடில்டாஸ் எனப்படும் அவுஸ்திரேலிய மகளிர் கால்பந்து அணிக்கும் இங்கிலாந்து மகளிர் கால்பந்து அணிக்கும் இடையிலான அரையிறுதிப் போட்டி புதன்கிழமையும் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறவுள்ளது.