2032 ஒலிம்பிக் போட்டிக்காக 7 பில்லியன் டாலர் நிதியை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது.
3.4 பில்லியன் டாலர்களை மத்திய அரசும், மீதமுள்ள 3.6 பில்லியன் டாலர்கள் குயின்ஸ்லாந்து மாநில அரசும் வழங்கும்.
இதன் கீழ், பிரிஸ்பேன் காபா ஸ்டேடியத்தின் வளர்ச்சிக்காக குயின்ஸ்லாந்து அரசாங்கம் 2.7 பில்லியன் டாலர்களை வழங்கும்.
பிரிஸ்பேன் அரினா பகுதியை மேம்படுத்த மத்திய அரசு 2.5 பில்லியன் டாலர்களை ஒதுக்கும்.
மேலும், மேலும் 16 மைதானங்கள் தலா 1.87 பில்லியன் டாலர் செலவில் மாநில அரசு மற்றும் மத்திய அரசால் புதுப்பிக்கப்படும்.
அவுஸ்திரேலிய நகரமொன்றில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவது இது 3ஆவது தடவையாகும்.
முன்னதாக, 1956 மெல்போர்ன் மற்றும் 2000 சிட்னி ஒலிம்பிக் போட்டிகள் இந்நாட்டில் நடைபெற்றன.