கடந்த 12 மாதங்களில் ஆஸ்திரேலியாவில் உணவுப் பொருட்களின் விலை ஒட்டுமொத்தமாக 7.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம், ரொட்டி மற்றும் பால் தொடர்பான பொருட்களின் விலை மிகவும் அதிகரித்தது.
பால் தொடர்பான பொருட்களின் பணவீக்கம் 15.2 சதவீதமாகவும், ரொட்டி உள்ளிட்ட தானியங்கள் தொடர்பான பொருட்களின் பணவீக்கம் 11.2 சதவீதமாகவும் உள்ளது.
இருப்பினும், பழங்கள் மற்றும் இறைச்சி பொருட்களின் விலைகள் ஒப்பீட்டளவில் குறைந்த மதிப்புகளில் இருந்து அதிகரித்துள்ளது.
புள்ளிவிபரப் பணியகத்தின் அறிக்கைகளின்படி, விநியோக வலையமைப்பில் உள்ள சிக்கல்கள் மற்றும் போக்குவரத்தில் உள்ள சிக்கல் நிலை ஆகியவை உணவுப் பொருட்களின் விலை உயர்வை பாதித்துள்ளன.
வரும் ஆண்டில் பணவீக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், உணவுப் பொருட்களின் விலை குறையும் என எதிர்பார்க்க முடியாது என்றும் கணிக்கப்பட்டுள்ளது.