Cinema3 நாட்களில் 1500 கோடி வசூலித்து பொக்ஸ் ஒபிசை தெரிக்க விட்ட...

3 நாட்களில் 1500 கோடி வசூலித்து பொக்ஸ் ஒபிசை தெரிக்க விட்ட தென்னிந்திய திரைப்படங்கள்

-

தமிழில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், மோகன்லால், ஷிவ ராஜ்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் தென்னிந்தியா மட்டுமின்றி இந்தியா முழுவதுமே சிறப்பான வரவேற்பினை பெற்று வருகிறது.

அதே போன்று தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் போலா ஷங்கர் திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. ஹிந்தியில் கடார் 2, ஓஎம்ஜி 2 ஆகிய படங்கள் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றன.

கடந்த வாரம் வெளியான திரைப்படங்களின் மூலமாக இந்திய அளவில் ரூ.390 கோடிக்கும் (1513 கோடி இலங்கை ரூபா) அதிகமாக வசூலித்துள்ளதாக இந்திய தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதாவது ஜெயிலர், கடார் 2, ஓம்ஜி2 மற்றும் போலா ஷங்கர் ஆகிய படங்கள் இணைந்து பொக்ஸ் உபிஸ் வசூலில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஒஃப் இந்தியா மற்றும் இந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இணைந்து வெளியிட்டுள்ள செய்தியில், “இந்தியா முழுவதும் ரூ.390 கோடிக்கும் அதிகமான வசூல். வார இறுதியில் இந்தியா முழுவதும் 2.10 கோடிக்கும் அதிகமான பேர் திரையரங்கிற்கு சென்று படம் பார்த்துள்ளனர்.

நமது சினிமா வரலாற்றில் கடந்த 100 வருடத்தில் இது போன்று வார இறுதி வசூலினை பார்த்ததில்லை. மேலும் கடந்த 10 வருடத்தில் இவ்வளவு அதிகமான நபர்கள் திரையரங்கிற்கு வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொமர்ஷியல் சினிமா மக்களிடம் சரியாக சென்றுள்ளதை இந்த பொக்ஸ் ஒபிஸ் வசூல் விவரங்கள் தெரிவிகின்றன. காலை காட்சிகள் கூட முழுவதுமாக நிரம்புகின்றன. இந்த வாரம் இந்திய சினிமாவின் கொமர்சியல் சினிமாவை விரும்புவர்களுக்கு சிறப்பான வாரமாக அமைந்துள்ளது. புதிய பாய்ச்சலுடன் சினிமா இயங்குவது மகிச்சியளிக்கிறது. சினிமா கலைஞர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் மிக்க நன்றி” எனக் கூறியுள்ளார்கள்.

நன்றி தமிழன்

Latest news

பணத்தைத் திரும்பப் பெறும் மில்லியன் கணக்கான Medibank வாடிக்கையாளர்கள்

மில்லியன் கணக்கான Medibank வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பணத்தைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் பணம் அதன் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படும் என்று...

சமூக ஊடகத் தடை குறித்து குழந்தைகளுக்குப் பரிச்சயப்படுத்த ஒரு அருமையான திட்டம்

ஆஸ்திரேலியா, ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட பல நாடுகள் தற்போது குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களைத் தடை செய்ய முயற்சித்து வருகின்றன. இந்தக் காரணத்திற்காக, ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இளைஞர்கள்...

200 கிலோ கோகைனுடன் விபத்துக்குள்ளான ஆஸ்திரேலிய விமானி

ஆஸ்திரேலிய விமானி ஒருவர் பயணித்த 200 கிலோகிராம் கோகைன் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற விமானம் பிரேசிலில் விபத்துக்குள்ளானது. பிரேசிலின் அலகோஸ் பகுதியின் கடற்கரையில் உள்ள கரும்புத் தோட்டத்தில்...

ALDI இடமிருந்து நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு Home delivery சேவை

ஜெர்மன் பல்பொருள் அங்காடி ALDI, DoorDash உடன் இணைந்து ஒரு டெலிவரி சேவையைத் தொடங்கியுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் இப்போது ALDI இலிருந்து பொருட்களை...