கடந்த நிதியாண்டில் டெல்ஸ்ட்ரா 2.1 பில்லியன் டாலர் லாபம் ஈட்டியுள்ளது.
இது கடந்த ஆண்டை விட 13 சதவீதம் அதிகமாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, அவர்களின் மொத்த வருமானம் 23 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.
இதனால் ஒரு பங்குக்கு பெறப்படும் தொகை 17 சதவீதம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கான கட்டணங்கள் 07 முதல் 20 சதவீதம் வரை உயர்த்தப்பட்டதன் மூலம் டெல்ஸ்ட்ராவின் வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளது.
இருப்பினும், டெல்ஸ்ட்ரா கடந்த மாதம் 500 வேலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்தது.