ஆஸ்திரேலியாவின் பாலின ஊதிய இடைவெளி 13 சதவீதமாக குறைந்துள்ளது.
இது கடந்த பெப்ரவரி மாதத்தின் தரவுகளை விட 0.3 வீதம் மட்டுமே குறைவு எனவும், எனவே இது குறிப்பிடத்தக்க வளர்ச்சி இல்லை எனவும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த நாட்டில், ஆண்கள் 1 டாலர் சம்பாதிக்கும் போது, பெண்களின் வருமானம் 87 காசுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
புள்ளியியல் அலுவலக அறிக்கையின்படி, பெண்களின் ஆண்டு வருமானம் ஆண்களை விட $13,000 குறைவாக உள்ளது.
கல்வி, பயிற்சி மற்றும் சுகாதார சேவைகள் ஆகிய துறைகளில் பெண்களின் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இந்த இடைவெளியை ஓரளவு குறைக்க காரணமாக உள்ளது.
எவ்வாறாயினும், கடந்த ஆறு மாதங்களில் சுரங்கம், நிதி மற்றும் காப்பீட்டு சேவைகள், சொத்து மற்றும் சில்லறை வர்த்தகம் உள்ளிட்ட பல துறைகளில் பாலின ஊதிய இடைவெளி விரிவடைந்துள்ளதாக புள்ளிவிபரத் தரவுகள் தெரிவிக்கின்றன.