Newsஅமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்

-

இந்தியாவில் இருந்து பல்வேறு வகையான பொருட்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாகி வருகிறது.

தோல் தயாரிப்புகள், மின்னனு பொருட்கள் உள்ளிட்ட இந்திய பொருட்களை அமெரிக்கா அதிக அளவில் இறக்குமதி செய்கிறது.

‘சிறப்பு வர்த்தக நாடு’ என அங்கிகாரம் கொடுத்து குறைவான வரிகளை இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதிக்கிறது. பொதுவாக, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்திய அரசாங்கம் கூடுதல் வரி விதிக்கும். அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் இருந்தபோது இந்த விதிமுறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா 100 முதல் 200 சதவீதம் வரை அதிகம் வரி வசூலிப்பதாக தெரிவித்து இந்திய வரி விதிப்பு முறைக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கு இடையே ஏற்றுமதி, இறக்குமதி வரி வேறுபாட்டால் அமெரிக்கா பாதிக்கப்படுகிறது என தெரிவித்து சிறப்பு வர்த்தக சலுகைகளை நிறுத்தபோவதாக அச்சுறுத்தினார். இதனால் அப்போது அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்பிடம் பேட்டி கண்டது.

அதில் இந்தியாவுக்கான தனது பொருளாதார நிலைப்பாடு மாறவில்லை என்பதை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

‘வரிவசூல் ராஜா’ என இந்திய நாட்டை சுட்டிக்காட்டிய அவர் அமெரிக்கா நாட்டின் மதுபானங்கள், இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், செல்போன்கள் உள்ளிட்ட இறக்குமதி பொருட்களுக்கான வரி விதிப்பு குறித்து குறிப்பிட்டார்.

‘பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் அமெரிக்க பொருட்களுக்கு நியாயமான வரி விதிக்கப்படுவது இல்லை’ என தெரிவித்த அவர் ‘தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்காவில் கூடுதல் வரிவிதிக்கப்படும்’ என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் ‘அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரிவிதிப்பு செய்யப்பட்டால் நாமும் அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் வரிவிதிக்க வேண்டும். அது பழிவாங்கல் என சொல்லப்பட்டாலும் சரி’ என தெரிவித்துள்ளார்.

Latest news

$100,000 டொலர்களை நெருங்கும் Bitcoin-இன் பெறுமதி!

உலகின் மிகவும் பிரபலமான மின்னியல் நாணயமான Bitcoin பெறுமதி வியாழன் (22) அன்று 100,000 அமெரிக்க டொலர்களை நெருங்கியது. 2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நவம்பர் 5...

அதானி குழுமத்தின் ஒப்பந்தங்களை இரத்து செய்த கென்யா

அமெரிக்கா வழக்கு தாக்கல் செய்ததைத் தொர்ந்து அதானி குழுமத்தின் ஒப்பந்தங்களை கென்யா இரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி, தங்கள் நாட்டு முதலீட்டாளர்களை...

30,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானத்திலிருந்து இறங்க முற்பட்ட பயணி

Milwaukee-இல் இருந்து Dallas Fort Worth-இற்கு பறந்து கொண்டிருந்த American Airlines விமானத்தில் பயணி ஒருவர் திடீரென விமானத்தில் இருந்து இறங்க விரும்புவதாக கூறியுள்ளார். அந்த சமயத்தில்...

மற்றுமொரு பிரபல நாட்டில் அதிகரித்துவரும் அகதிகளின் எண்ணிக்கை

கனடாவில், அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அவர்களுக்காக தற்காலிக தங்குமிடங்களை உருவாக்க அரசு திட்டமிட்டுவருகிறது. Ottawa நகரம், அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்காக தற்காலிக தங்குமிடங்களை உருவாக்க...

மற்றுமொரு பிரபல நாட்டில் அதிகரித்துவரும் அகதிகளின் எண்ணிக்கை

கனடாவில், அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அவர்களுக்காக தற்காலிக தங்குமிடங்களை உருவாக்க அரசு திட்டமிட்டுவருகிறது. Ottawa நகரம், அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்காக தற்காலிக தங்குமிடங்களை உருவாக்க...

நகரங்களை விட்டு வெளியேறும் அதிகளவான ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியாவின் கிராமப்புறங்களுக்குச் செல்ல விரும்புவோரின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது என்று புதிய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சுமார் 40 சதவீத புறநகர் குடியிருப்பாளர்கள் ஆஸ்திரேலியாவின் பிராந்தியத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளனர், மேலும்...