அடிலெய்டில் வரும் புதன்கிழமை பழங்குடியின மக்களின் குரல் வாக்கெடுப்பு நடைபெறும் தேதியை பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அறிவிப்பார் என்று பிரதமர் அலுவலகம் இன்று அறிவித்துள்ளது.
பொதுவாக ஒக்டோபர் 14 ஆம் திகதி நாடு முழுவதிலும் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், 6 வாரங்கள் பிரச்சார காலத்தை அனுமதிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவளிக்குமாறு கடந்த வாரம் நடைபெற்ற தொழிலாளர் கட்சி மாநாட்டிலும் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடைசியாக 1999 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் பொதுவாக்கெடுப்பு நடைபெற்றது.
ஆஸ்திரேலிய மக்கள்தொகையில் பழங்குடி மக்களை சேர்க்க வேண்டுமா என்பது குறித்து 1967 ஆம் ஆண்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அதன் பிரச்சாரம் தெற்கு ஆஸ்திரேலியாவிலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.