Newsவெற்றிகரமாக நிலவில் இறங்கியது சந்திரயான்-3ன் விக்ரம்

வெற்றிகரமாக நிலவில் இறங்கியது சந்திரயான்-3ன் விக்ரம்

-

நிலவை ஆய்வு செய்வதற்காக இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியது.

இந்திய விண்வெளி ஆய்வின் வரலாற்று நிகழ்வாக சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. 

சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவப் பகுதியில் தடம் பதித்தது.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் நிலவுக்கு விண்கலன் அனுப்பியதில் தோல்வியை தழுவிய நிலையில், இந்தியாவின் சந்திரயான் -3 விண்கலம் நிலவில் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது. 

சந்திரயான் -2 தோல்விக்கு பிறகு, பல்வேறு மாற்றங்களுடன் சந்திரயான்-3 விண்கலத்தை வடிவமைத்து, எல்விஎம்-3 ரொக்கெட் மூலம் கடந்த ஜூலை 14-ஆம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.

பல்வேறு கட்ட பயணங்களுக்கு பின்னா் நிலவின் சுற்றுப் பாதையில் விண்கலம் பயணித்தது. சந்திரயான் 3-இல் உள்ள உந்து கலனில் இருந்து லேண்டா் கலன் கடந்த 17-ஆம் தேதி விடுவிக்கப்பட்டது.

தரையிறங்கியது லேண்டர் கலன்

நிலவுக்கும் லேண்டர் கலனுக்கும் இடையேயான தூரத்தை பல்வேறு கட்டங்களாக படிப்படியாக இஸ்ரோ குறைத்தது. இறுதியில், குறைந்தபட்சம் 25 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 134 கி.மீ தொலைவும் கொண்ட சுற்றுப் பாதையில் லேண்டர் கொண்டுவரப்பட்டது. 

பின்னர் நிலவின் தரையிலிருந்து 150 மீட்டா் உயரத்துக்கு லேண்டா் கொண்டுவரப்பட்டது. சில விநாடிகள் அந்த நிலையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர், அதிலுள்ள சென்சாா்கள் மூலம் தரையிறங்க சரியான சமதள பரப்புடைய இடம் தோ்வு செய்யப்பட்டது. 

லேண்டரின் வேகம் பூஜ்ஜிய நிலையை எட்டியதும், மெதுவாக நிலவில் தரையிறக்கும் முயற்சியை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். 

இந்த முயற்சி பலன் அளித்ததால், சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. 

சந்திரயான் -3 திட்டம் வெற்றி: இஸ்ரோ

சந்திரயான் -3 திட்டம் வெற்றி பெற்றதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கோஷமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஒருவரையொருவர் ஆரத்தழுவி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.

சந்திரயான் -3 திட்டம் வெற்றி பெற்றதால், புதிய இந்தியா உருவாகியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

ஏலத்தில் 6.2 மில்லியன் அமெரிக்க டொலருக்கு விற்பனையான சுவரில் ஒட்டப்பட்ட ஒற்றை ‘வாழைப்பழம்’

அமெரிக்காவின் நியூயோர்க் ஏல மையத்தில் சுவற்றில் டேப் போட்டு ஒட்டப்பட்ட இந்த வாழைப்பழம் கடந்த புதன்கிழமை ஏலத்திற்கு வந்துள்ளது. இத்தாலியைச் சேர்ந்த பிரபல கைவினைக் கலைஞரான மொரிசியோ...

விக்டோரியாவில் நடந்த மாபெரும் திருவிழாவில் நடத்தப்பட்ட Pill Testing

"Beyond The Valley" திருவிழாவிற்கு சட்டவிரோத போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்காக முதன்முறையாக மாத்திரை பரிசோதனை முறை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் 28 முதல் ஜனவரி...

சேவைகளுக்கான கட்டணத்தை அதிகரிக்கும் Australia Post

தபால் விநியோக சேவைகளுக்கான கட்டணத்தை அதிகரிக்க Australia Post முடிவு செய்துள்ளது. 2025 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இருந்து கடித விநியோக கட்டணத்தை 50 காசுகள் வரை...

28 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் நடந்த பயங்கர விமான விபத்து

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய மூன்று எத்தியோப்பியர்களால் ஒரு விமானம் கடத்தப்பட்டு நவம்பர் 23ம் திகதியுடன் 28 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. நவம்பர் 23, 1996 இல், எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ்...

28 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் நடந்த பயங்கர விமான விபத்து

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய மூன்று எத்தியோப்பியர்களால் ஒரு விமானம் கடத்தப்பட்டு நவம்பர் 23ம் திகதியுடன் 28 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. நவம்பர் 23, 1996 இல், எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ்...

இன்று முதல் விக்டோரியா வானிலையில் ஏற்படப்போகும் பெரிய மாற்றம்

அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கு பிராந்தியத்தில் வெப்பநிலை குறைய ஆரம்பித்துள்ளதாகவும், நாட்டின் பல பகுதிகளில் நேற்று பதிவான அதிக வெப்பநிலை படிப்படியாக குறைவடையும் எனவும் வானிலை ஆய்வு மையம்...