ஆஸ்திரேலியா மாணவர் விசா விண்ணப்பத்தில், மாணவர் விசா விண்ணப்பதாரர்கள் படிப்பை முடித்த பிறகு ஆஸ்திரேலியாவில் இருக்க விரும்புவதைக் குறிப்பிடுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள்.
தற்போதைய தொழிற்கட்சி அரசாங்கத்தினால் குடிவரவு அமைப்பில் அறிமுகப்படுத்தப்படவுள்ள பாரிய சீர்திருத்தங்களில் இந்த முன்மொழிவும் உள்ளடக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள விதிமுறைகளின்படி, படிப்பு அல்லது பட்டப்படிப்பை முடித்த பிறகு, அவர்/அவள் சொந்த நாட்டிற்கு திரும்புவார் என்பதை மாணவர் விசா விண்ணப்பம் குறிப்பிட வேண்டும்.
அவர்கள் தொடர்ந்து நாட்டில் தங்க விரும்புவதாகக் கூறி மாணவர் விசா விண்ணப்பம் நிராகரிக்கப்படும் வாய்ப்பும் மிக அதிகம்.
எவ்வாறாயினும், மாணவர் வீசா மூலம் தகுதிகளை பூர்த்தி செய்பவர்களுக்கு நாட்டில் நீண்ட காலம் தங்கி பணிபுரியும் வாய்ப்பை வழங்கும் நோக்கில் இந்த புதிய பிரேரணையை கொண்டுவர தொழிற்கட்சி அரசாங்கம் தயாராகி வருகிறது.
அவுஸ்திரேலியாவுக்கு உயர்கல்வி பெறும் நோக்கத்துடன் வரும் மாணவர் வீசா விண்ணப்பதாரர்களை அடையாளம் காணும் விரிவான முறைமையும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.