ஆசிரியர் சம்பளப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுமாறு தெற்கு ஆஸ்திரேலிய மாநில எதிர்க்கட்சி, மாநில அரசு மற்றும் ஆசிரியர் சங்கங்கள் கேட்டுக் கொள்கின்றன.
வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை ரத்து செய்துவிட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு ஆசிரியர் சங்கங்களுக்கு மாநில எதிர்க்கட்சித் தெரிவித்துள்ளது.
03 வருடங்களில் 20 வீத சம்பள உயர்வைக் கோரி ஆசிரியர் சங்கங்கள் இந்தப் பணிப்புறக்கணிப்பைத் திட்டமிட்டுள்ளன.
ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் மத்தியில் நேற்று இடம்பெற்ற வாக்கெடுப்பில் 80 வீதமானோர் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே, வரும் வெள்ளிக்கிழமை குழந்தைகளை வீட்டில் வைத்திருக்க வேண்டும் அல்லது குழந்தை காப்பகத்திற்கு அனுப்ப வேண்டும் என ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் பெற்றோர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
எவ்வாறாயினும், அன்றைய தினம் எந்தவொரு குழந்தையையும் தடுக்க அனுமதிக்கப்பட மாட்டாது என்று தெற்கு ஆஸ்திரேலிய மாநில கல்வித் துறை உறுதியளிக்கிறது.