மெட்டா நிறுவனத்தின் சமூக ஊடக தளமான த்ரெட்ஸ், அதன் வலை பதிப்பை (web version) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வெளியீட்டினூடாக செயலி இல்லாமல் த்ரெட்ஸ் சமூக ஊடகத்தை பயன்படுத்தலாம் என அந்த நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
த்ரெட்ஸின் அண்மைகால பயன்பாடுகள் வீழ்ச்சியடைந்துள்ள நிலையிலேயே, இவ்வாறு புதுப்பிக்க அந்த நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டா, ஜூலையில் மைக்ரோ பிளாக்கிங் (microblogging) தளத்தை அறிமுகப்படுத்தியது.
மெட்டாவின் தலைமை நிர்வாகி, மார்க் ஜுக்கர்பெர்க், டெஸ்க்டாப் பதிப்பை வெளியிடவுள்ளதாக கடந்த செவ்வாய் கிழமை அறிவித்திருந்தார். அவரின் த்ரெட்ஸ் பதிவில் “நான் வலையில் த்ரெட்களை உருவாக்கும் உண்மையான காட்சிகள். அடுத்த சில நாட்களில் வெளியிடப்படும். ” என்று குறிப்பிட்டுள்ளார்.