டார்வின் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 03 அமெரிக்க வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் பெல் போயிங் விமானம் விபத்துக்குள்ளானதில் திவி தீவு அருகே இந்த விபத்து ஏற்பட்டது.
அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்க இராணுவத்தினர் இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
டார்வினில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் நடைபெறும் இந்த ராணுவ பயிற்சியில் 2,500க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.